முகப்பு
செய்திகள்

மாஸ்டர், டாக்டர், சூரரைப் போற்று: வரிசையாக பெரிய படங்களை அள்ளிய நிறுவனம்!

இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது...

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:56 PM
பகிர்:

‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கராவின் அடுத்தப் படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம்.

கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி.

சூர்யாவின் 2டி நிறுவனமும் குனீத் மோங்காவின் சிக்யா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. குனீத் மோங்கா இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகத் தமிழில் அறிமுகமாகிறார். ஹிந்தியில் லஞ்ச்பாக்ஸ், மாசான் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் 8 அன்று படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. ஏப்ரல் மாதம் இப்படம் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

விஜய் நடித்துள்ள மாஸ்டர், சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் ஆகிய படங்களின் தொலைக்காட்சி உரிமைகளையும் சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் மற்றொரு பெரிய படமும் அதன் வசம் சென்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.