செய்திகள்

தர்பார் படம் வெளியாகும் போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ அனுமதி கோரி மனு!

எழில்

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம்.

ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லன் - பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி. தர்பார் படம் ஜனவரி 9 அன்று தமிழ், ஹிந்தி, தெலுங்கில் வெளிவரவுள்ளது. தர்பார் படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 2.39 மணி நேரம் படத்தின் கால அளவு என தணிக்கைச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தின் மெய்யனூர் கிராமத்தில் உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ். திரையரங்கில் தர்பார் படம் வெளியாகும் தினத்தன்று, ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ கனகராஜ் என்பவர் அனுமதி கோரியுள்ளார். பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் ஹெலிகாப்டரிலிருந்து திரையரங்கின் முன்பு மலர் தூவ  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, குறிப்பிட்ட இடத்தை மேற்பார்வை செய்து விரிவான அறிக்கையினை அனுப்புமாறு சேலம் வருவாய் கோட்டாட்சியர், சேலம் மேற்கு வட்டாட்சியருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT