செய்திகள்

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் கெட்டப் இதுதான்! (விடியோ)

DIN

இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் விஜய் கைகோர்த்ததில் இருந்தே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை அடைந்தது. இதன்பிறகு, விஜய் சேதுபதியும் இந்தப் படத்தில் இணைய படத்தின் மீதான எதிர்பார்ப்பு அடுத்த கட்டத்துக்குச் சென்றது. இதன்பிறகு, சாந்தனு, மாளவிகா மோகனன் என நடிகர் பட்டாளமே படத்தில் இணைந்தனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் . 'மாஸ்டர்' என பெயரிடப்பட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டிசம்பர் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியானது. இது ரசிகர்களின் பாராட்டை அள்ளிக் குவித்தது.

தில்லி, கர்நாடகம் உள்ளிட்ட இடங்களில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் சில காட்சிகள் படமாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்த சில காட்சிகள் இணையத்தில் வெளியானது. ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர் ஒருவர் எடுத்த மொபைல் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த விடியோவில் விஜய் சேதுபதியின் கெட்டப் வெளியாகியுள்ளது. இக்காட்சி டிக் டாக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT