செய்திகள்

முதல் நாளன்று சுமாரான வசூலை அடைந்த தீபிகா படுகோனின் ‘சபாக்’

எழில்

தன்னை ஒருதலையாகக் காதலித்தவனின் காதலை ஏற்க மறுத்ததால் 15-வது வயதில் அமிலம் வீச்சுக்கு ஆளான லட்சுமி அகர்வால், தன்னம்பிக்கையுடன் போராடி அவனுக்குச் சட்டத்தின் மூலம் தண்டனை வாங்கித் தந்தார். இதற்காக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாராட்டுதலைப் பெற்ற லட்சுமி அகர்வால், சில ஆண்டுகள் கழித்து அலோக் தீட்சித் என்பவரைக் காதலித்து ஒரு பெண் குழந்தைக்கு தாய் ஆனார். தன்னைப் போன்று அமிலம் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சண்டிகரில் சமூக அமைப்பு ஒன்றை லட்சுமி அகர்வால் துவங்கியுள்ளார்.  

இவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து பிரபல இயக்குநர் மற்றும் கவிஞருமான குல்சாரின் மகள் மேக்னா குல்சார் திரைப்படமொன்றை இயக்கியுள்ளார். லட்சுமி அகர்வால் வேடத்தில் பிரபல நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார். சபாக் (Chhapaak) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் நேற்று (ஜனவரி 10) வெளியானது. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ், மிரிகா புரொடக்‌ஷன்ஸ், தீபிகா படுகோனின் கா புரொடக்‌ஷன் ஆகிய நிறுவனங்கள் கூட்டாகத் தயாரித்துள்ளன.

முதல் நாளன்று, நகரங்களில் மட்டும் அதிகப் பார்வையாளர்களைப் பெற்ற இந்தப் படம் முதல் நாள் வசூலாக இந்தியாவில் ரூ. 4.77 கோடியைப் பெற்றுள்ளது. இதனால் சனி, ஞாயிறு ஆகிய அடுத்த இரு தினங்களில் இப்படத்தின் வசூல் அதிகரித்தால் மட்டுமே இதன் வெற்றி நிர்ணயிக்கப்படும் எனத் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

SCROLL FOR NEXT