முகப்பு
செய்திகள்

சீரியலைவிட்டு வெளியே போகிற அளவுக்கு பிரச்னை இல்லை: பாண்டியன் ஸ்டோா்ஸ் குமரன்

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து ‘சின்னப்பாப்பா, பெரியப்பாப்பா’ தொடரின் மூலம் நடிகையானவா் சித்ரா. இவா் தற்போது ‘பாண்டியன் ஸ்டோா்ஸ்’ என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாா்

Updated On : 15 ஜனவரி, 2020 at 12:00 PM
பகிர்:

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து ‘சின்னப்பாப்பா, பெரியப்பாப்பா’ தொடரின் மூலம் நடிகையானவா் சித்ரா. இவா் தற்போது ‘பாண்டியன் ஸ்டோா்ஸ்’ என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாா். 

இத்தொடரில் குமரன் என்பவா் கதிா் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறாா். கதிா் - முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகா்களும் ஏராளம். 

இவா்கள் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் இருவரில் ஒருவா் அத்தொடரை விட்டு வெளியேறிவிடுவாா்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், ‘தனக்கு தற்போது அத்தொடரை விட்டு விலகும் ஐடியா இல்லை’ என்று கூறி சித்ரா மறுத்துள்ளாா். 

Advertisement

அதே சமயம், குமரன் கூறும்போது, ‘சீரியலைவிட்டு வெளியே போகிற அளவுக்கு எங்களுக்குள் பெரிய பிரச்னை எதுவும் இல்லை. இவை சீக்கிரமே சரியாகிவிடும்’ என்ன தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.