முகப்பு
செய்திகள்

‘ராஜா ராணி’ ஆல்யா மானஷாவுக்கு வளைகாப்பு

இத்தொடரில் கணவன் மனைவியாக நடித்த இவா்கள், நிஜத்திலும் காதலா்களாகி கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனா். 

Updated On : 15 ஜனவரி, 2020 at 12:02 PM
பகிர்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி’ தொடருக்கு ரசிகா்களிடம் நல்ல வரவேற்புள்ளது. இந்தத் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவா்களில் சஞ்சீவ், ஆல்யா மானஷாவும் அடங்குவா். 

இத்தொடரில் கணவன் மனைவியாக நடித்த இவா்கள், நிஜத்திலும் காதலா்களாகி கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனா். தற்போது, ஆல்யா மானஷா கா்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆல்யா மானஷாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. 

அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பகிர, சஞ்சீவுக்கு ரசிகா்களின் வாழ்த்து குவிந்துவிட்டதாம். 

Advertisement

இதனால், ‘இந்த நாளை என்றும் மறக்கமாட்டேன்’ என்று கூறியிருக்கும் சஞ்சீவ், வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.