செய்திகள்

விஜய் ரசிகர்களுக்கு பொங்கல் பரிசு: வெளியானது மாஸ்டரின் செகண்ட் லுக்!

DIN


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் வெளியானது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு என நடிகர் பட்டாளமே நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

இதையடுத்து, ரசிகர்களுக்கான புத்தாண்டு பரிசாக தளபதி-64 என தற்காலிகமாகக் குறிப்பிடப்பட்டு வந்த இப்படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிட்டது. இந்தப் படத்துக்கு மாஸ்டர் என பெயரிடப்பட்டது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தில் செகண்ட் லுக் இன்று (புதன்கிழமை) வெளியாகும் என படக்குழு ஏற்கெனவே அறிவித்தது. அதன்படி, விஜய் ரசிகர்களுக்கான பொங்கல் பரிசாக மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. 

இதையடுத்து, விஜய் ரசிகர்கள் வழக்கம்போல் டிவிட்டர் டிரெண்டிங்கில் தெறிக்கிவிடத் தொடங்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT