முகப்பு
செய்திகள்

என்னை எதிர்த்தவர்களுக்கு நன்றி: நடிகை வரலட்சுமி

எனக்கு எதிராக நின்றவர்களுக்கும் என் தன்னம்பிக்கையை இழக்கச் செய்தவர்களுக்கும் நன்றி...

Updated On : 25 ஜனவரி, 2020 at 12:56 PM
பகிர்:

2012-ல் போடா போட்டி படத்தின் மூலமாக அறிமுகமானவர், நடிகை வரலட்சுமி. தமிழில் அதிகப் படங்களில் நடித்துள்ள வரலட்சுமி, மலையாளம், கன்னடம், தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தான் 25 படங்களில் நடித்து முடித்துள்ளது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் வரலட்சுமி. அதில் அவர் கூறியிருப்பதாவது:

மிகவும் கடினமான, நீளமான பயணம் இது. இந்தக் கட்டத்தை எட்ட நான் பல சவால்களைச் சந்தித்துள்ளேன். என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. எனக்கு எதிராக நின்றவர்களுக்கும் என் தன்னம்பிக்கையை இழக்கச் செய்தவர்களுக்கும் நன்றி. ஏனெனில் அவர்களுடைய எதிர்மறை எண்ணங்களால் தான் நான் வலிமை பெற்று, அவர்களுடைய எண்ணம் தவறு என்று நிரூபிக்க மேலும் தைரியம் பெற்றேன். என் மீது நம்பிக்கை வைத்த அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. என் நல்லது, கெட்டதுக்கு நடுவில் என்னுடனேயே இருந்த என் ஒப்பனைக் கலைஞர் ரமேஷ் அண்ணாவுக்கு நன்றி என்றார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.