முகப்பு
செய்திகள்

தனுஷின் 3-வது ஹிந்திப் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

ராஞ்சானா, ஷமிதாப் ஆகிய படங்களுக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் அடுத்த ஹிந்திப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2020 at 11:11 AM
பகிர்:

ராஞ்ஜானா, ஷமிதாப் ஆகிய படங்களுக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் அடுத்த ஹிந்திப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Atrangi Re என்கிற ஹிந்திப் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். ஆனந்த் எல். ராய் இயக்கும் இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், சாரா அலி கான் போன்றோர் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தனுஷின் முதல் ஹிந்திப் படமான ராஞ்ஜானாவை ஆனந்த்  எல். ராய் 2013-ல் இயக்கினார். 

மார்ச் 1 முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் இப்படத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.