செய்திகள்

நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் எப்போது வெளியாகும்?

DIN

நடிகை ஷகீலாவின் வாழ்க்கை, ஷகீலா என்கிற ஹிந்தித் திரைப்படமாக உருவாகியுள்ளது. ஷகீலா கதாபாத்திரத்தில் நடிகை ரிச்சா சதா நடித்துள்ளார். 

கன்னட இயக்குநரான இந்திரஜித் லங்கேஷ், இப்படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமாகியுள்ளார். ஷகீலா படம் பற்றி அவர் கூறியதாவது:

படத்தை எடுத்து முடித்துவிட்டேன். தணிக்கை செய்யப்பட்டு வெளியீட்டுத் தயாராக உள்ளது. இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவது பொருத்தமாக இருந்தாலும் அனைத்து விதமான ரசிகர்களையும் ஈர்த்தவர் நடிகை ஷகீலா. அனைவரும் இந்தப் படத்தை ஆவலாக உள்ளார்கள். எனவே தான் படத்தைத் திரையரங்கில் வெளியிடத் தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளார்கள். அமெரிக்காவில் திரையரங்குகள் மீண்டும் இயக்கப்படுவதாகத் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவிலும் அந்நிலை வரும்போது படம் வெளியாகும். ஷகீலா படம் ஹிந்தியில் உருவாக்கப்பட்டுள்ளது. கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படத்தை டப் செய்துள்ளோம் என்றார்.a

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாகூர் மீது பேச்சுக்கு சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்தில் புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT