செய்திகள்

தமிழில் வெளியாகவுள்ள அஜய் தேவ்கன், ப்ரியா மணி நடித்துள்ள மைதான் படம்!

DIN

அஜய் தேவ்கன் நடித்து வரும் மைதான் படம் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1952-1962 காலக்கட்டத்திலான இந்தியக் கால்பந்தின் நிலைமையை விவரிக்கும் விதத்தில் மைதான் என்கிற ஹிந்தி படம் உருவாக்கப்பட்டு வருகிறது. 1950 முதல் 1963 வரை இந்தியக் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்த சையத் அப்துல் ரஹிம் வேடத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். அஜய் தேவ்கன், ப்ரியா மணி போன்றோர் நடித்து வரும் இப்படத்தை அமித் ஆர். சர்மா இயக்கி வருகிறார்.

இந்தப் படமும் முதலில் இந்த வருடம் டிசம்பர் 11 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2021 ஆகஸ்ட் 13 அன்று மைதான் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஹிந்திப் படமான மைதான் - தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

SCROLL FOR NEXT