செய்திகள்

கரோனா பரிசோதனை மேற்கொள்ளும்படி நடிகை ரேகாவுக்கு மும்பை மாநகராட்சி அறிவுரை

ரேகா பங்களாவுக்கு அருகே உள்ள பங்களாக்களில் பணியாற்றும் நான்கு பாதுகாவலர்களுக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது...

DIN

பாதுகாவலருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும்படி நடிகை ரேகாவுக்கு மும்பை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரபல பாலிவுட் நடிகை ரேகா வசிக்கும் பங்களாவுக்கு மும்பை மாநகராட்சி சீல் வைத்துள்ளது.

1970 முதல் ஹிந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்த ரேகா, 1990 வரை ஏராளமான ஹிந்திப் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2018-ல் ஒரு ஹிந்திப் படத்தில் பாடலில் மட்டும் பங்கேற்றார்.

மும்பையின் பாந்த்ரா பகுதியில் ரேகா வசித்து வரும் நிலையில் அவருடைய பாதுகாவலருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ரேகாவின் பங்களாவுக்கு மும்பை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. ரேகாவின் பங்களாவில் இரு பாதுகாவலர்கள் பணியில் உள்ள நிலையில் ஒருவர் கரோனாவின் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரேகாவின் பங்களா உள்ள பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. பங்களாவுக்கு வெளியே கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்கிற அடையாள வில்லை ஒட்டப்பட்டுள்ளது.

பாதுகாவலருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் ரேகாவை கரோனா பரிசோதனை மேற்கொள்ளும்படி மும்பை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பாதுகாவலருடன் தொடர்பில் இல்லாததால் தனக்குப் பரிசோதனை தேவையில்லை என ரேகா கூறியுள்ளார். மேலும் கடந்த சில வாரங்களாக தான் சுயமாகத் தனிமையில் உள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார். 

இதுமட்டுமல்லாமல் ரேகா பங்களாவுக்கு அருகே உள்ள பங்களாக்களில் பணியாற்றும் நான்கு பாதுகாவலர்களுக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் அடிக்கடி சந்தித்து உரையாடுவதால் கரோனா பரவல் ஏற்பட்டிருக்கும் என அறியப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

நான் திமுகவின் பி டீமா? பன்னீர் செல்வம் விளக்கம்!

செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!

கோபி, சுதாகர் படத்தின் போஸ்டர் வெளியீடு!

நான் அழுதுவிடுவேன் என பயம் வந்துவிட்டது!: Kamal Hassan | Agaram foundation

SCROLL FOR NEXT