செய்திகள்

தனுஷ் நடிக்கும் ஹிந்திப் படம்: மதுரையில் நடைபெறவுள்ள படப்பிடிப்பு

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அக்டோபரில் மதுரையில் தொடங்கவுள்ளது. பிறகு தில்லி, மும்பையில் அக்‌ஷய் குமாரை வைத்து படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

DIN

ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் அத்ராங்கி ரே படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் மீண்டும் தொடங்கவுள்ளது.

தனுஷ், அக்‌ஷய் குமார், சாரா அலி கான் ஆகியோர் நடிப்பில் அத்ராங்கி ரே படத்தை இயக்கி வருகிறார் ஆனந்த் எல். ராய். இப்படம் பற்றி அவர் கூறியதாவது:

ஊரடங்குக் காலத்தில் அத்ராங்கி ரே படத்தின் படப்பிடிப்பு குறித்து திட்டமிட்டுள்ளேன். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அக்டோபரில் மதுரையில் தொடங்கவுள்ளது. பிறகு தில்லி, மும்பையில் அக்‌ஷய் குமாரை வைத்து படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. நிச்சயமாக, அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி தான் படப்பிடிப்பை நடத்துவோம் என்று கூறியுள்ளார்.

2013-ல் தனுஷ் நடித்த ரான்ஜானா என்கிற ஹிந்திப் படத்தை ஆனந்த் எல். ராய் இயக்கினார். அவருடன் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளார் தனுஷ்.

வொய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவம் மீது அதிக சார்பு நிலை! டிரம்ப் நிர்வாகம் மீது விமர்சனம்!!

பாஜகவின் கிளையாக இருந்த அதிமுக தற்போது பாஜகவின் இலையாக மாறிவிட்டது! - Udhayanidhi Stalin

ஹரியாணாவில் ராட்டினம் சரிந்து விபத்து: காவலர் பலி, 13 பேர் காயம்

கிராமப் பின்னணி கதையில் சிவகார்த்திகேயன்?

அபார பந்துவீச்சால் இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த அமெரிக்கா; காப்பாற்றிய சூர்யகுமார் யாதவ்!

SCROLL FOR NEXT