ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள அண்டாவ காணோம் படம் ஆகஸ்ட் 28-ல் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.
ஸ்ரேயா ரெட்டி நடித்த அண்டாவ காணோம் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. வேல்மதி இயக்கியுள்ள இந்தப் படம் நீண்ட நாளாக வெளிவராமல் இருந்த நிலையில் ஜே.எஸ்.கே. பிரைம் மீடியா என்கிற ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 28 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.