முகப்பு
செய்திகள்

பிரபல தயாரிப்பாளரின் தாய் காலமானார்

எனக்கு எல்லாமுமாக இன்று வரை இருந்த என் அன்பு அன்னை ஜகதம்மாள், இன்று காலை அமைதியாக என்னை விட்டு பிரிந்தார்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் தனஞ்ஜெயனின் தாய் காலமானார்.

இதுபற்றி ட்விட்டரில் தனஞ்ஜெயன் எழுதியதாவது:

எனக்கு எல்லாமுமாக இன்று வரை இருந்த என் அன்பு அன்னை ஜகதம்மாள், இன்று காலை அமைதியாக என்னை விட்டு பிரிந்தார். அவருக்கு வயது 89. அவரின் ஆசிகள் என்றுமே என்னுடன் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் என்று எழுதியுள்ளார்.

தனஞ்ஜெயனின் தாய் காலமானதற்குத் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

சமீபத்தில் வெளியான காற்றின் மொழி, மிஸ்டர் சந்திரமெளலி ஆகிய படங்களைத் தயாரித்த தனஞ்ஜெயன் அடுத்ததாக கபடதாரி என்கிற படத்தைத் தயாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.