செய்திகள்

பெண்குயின் படம் திரையரங்கில் வெளியாகுமா?: கார்த்திக் சுப்புராஜ் பதில்!

DIN

அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள பெண்குயின் படத்தைத் திரையரங்கில் வெளியிட வாய்ப்புள்ளதா என்கிற கேள்விக்கு இயக்குநரும் தயாரிப்பாளருமான கார்த்திக் சுப்புராஜ் பதில் அளித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் மே 29 அன்று அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படம் ஜூன் 19 அன்று அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியிடப்படுகிறது.

மேயாத மான், மெர்குரி படங்களை அடுத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள பெண்குயின் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். கதாநாயகி வேடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தப் படத்தை ஈஷ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். இசை - சந்தோஷ் நாராயணன். கீர்த்தி சுரேஷின் 24-வது படம் இது.

இந்நிலையில் பெண்குயின் படத்தின் வெளியீடு குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது:

ஓடிடி தளத்தில் வெளியிடுவது பற்றி நிறைய யோசித்தோம். அதன் சாதக பாதகங்கள் பற்றி அலசிய பிறகுதான் முடிவெடுத்தோம். அதிகப் பார்வையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். எல்லைகள், மாநிலங்கள், நாடுகள் தாண்டி பெரிய அளவில் படம் ரசிகர்களைச் சென்றடைகிறது. அமேசான் பிரைமில் படத்தைப் பார்க்க மக்கள் ஆவலாக உள்ளார்கள். இதனால் இந்த முடிவுக்கு நாங்கள் வருந்தவில்லை.

அமேசான் பிரைமின் சிறப்புப் படம் என்பதால் ஊரடங்குக் காலம் முடிந்த பிறகு திரையரங்கில் இதை வெளியிட வாய்ப்பில்லை என நினைக்கிறேன். சட்டரீதியாகத் திரையரங்கில் வெளியிட முடியும் என எண்ணவில்லை. எனக்கு இதுபற்றி நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் அதற்கு வாய்ப்பிருந்தால் நிச்சயம் செய்வோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT