செய்திகள்

இன்று வெளியாகியுள்ள என் படத்தை அனைவரும் கண்டுகளியுங்கள்: காயத்ரி ரகுராம் வேண்டுகோள்!

காயத்ரி ராகுராம் இயக்கியுள்ள யாதுமாகி நின்றாய் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக இன்று வெளியாகியுள்ளது.

DIN

காயத்ரி ராகுராம் இயக்கியுள்ள யாதுமாகி நின்றாய் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக இன்று வெளியாகியுள்ளது.

காயத்ரி ரகுராம் நடித்து இயக்கியுள்ள படம் - யாதுமாகி நின்றாய். கதாநாயகியாக நடிக்க ஆசைப்படும் பெண் ஒருவர், சென்னைக்கு வந்து குரூப் டான்சரான கதையைப் படமாக எடுத்துள்ளார் காயத்ரி ரகுராம். உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இசை - அஸ்வின் வினாயக மூர்த்தி.

பல காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போன நிலையில் ஜீ5 ஓடிடி தளத்தில் யாதுமாகி நின்றாய் படம் இன்று வெளியாகியுள்ளது.

இதுபற்றி காயத்ரி ரகுராம் கூறியதாவது:

ஓர் இயக்குநராக இது என்னுடைய முதல் குழந்தை. உங்களுக்கு நேரம் இருக்கும்போது அனைவரும் கண்டுகளியுங்கள். நான் பார்த்த என் மனத்துக்கு நெருக்கமான கதை இது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்க்கட்சியினர் - குரங்குகள்? மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி விமர்சனத்தால் சர்ச்சை!

ஜிஎஸ்டி சீர்திருத்த நம்பிக்கையில் சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றம்!

பாபா - கூலி! இதை கவனித்தீர்களா?

கீழே தவறினாலும் உடையாத ஸ்மார்ட்போன்! அடுத்த மாதம் வெளியாகிறது ஓப்போ எஃப் 31!

மும்பையில் மழை வெள்ளத்தில் தத்தளித்த பள்ளி வேன்: குழந்தைகளைப் பத்திரமாக கரைசேர்த்த போலீஸாருக்கு பாராட்டு!

SCROLL FOR NEXT