நடிகை பூர்ணா 
செய்திகள்

கோலிவுட் நடிகைக்கு மிரட்டல்: நான்கு இளைஞர்கள் கைது

கோலிவுட் நடிகை பூர்ணாவிற்கு மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

IANS

கொச்சி: கோலிவுட் நடிகை பூர்ணாவிற்கு மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்தவர் பூர்ணா (எ) ஷாம்னா காசிம். இவர் தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சமீபத்தில் வெளியான கொடிவீரன், சவரக்கத்தி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 40 படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பூர்ணாவிற்கு மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

இதுதொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத கொச்சி மாவட்டம் மராடு காவல் நிலைய அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ‘தனக்கு அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் விடுத்ததாக நடிகை பூர்ணா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

SCROLL FOR NEXT