முகப்பு
செய்திகள்

விக்ரம் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள கோப்ரா: திங்கள் அன்று வெளியாகும் முதல் பாடல்!

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:51 PM
பகிர்:

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து. இசை - ஏ.ஆர். ரஹ்மான்.

கோப்ரா படத்தில் ஏழு வேடங்களில் விக்ரம் நடிப்பதாக அறியப்படுகிறது. இப்படத்தின் கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் போன்றோர் நடிக்கிறார்கள். மே மாதம் கோப்ரா படம் வெளிவருவதாக இருந்த நிலையில் அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தைத் தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ, 90 நாள்கள் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இன்னும் 25% படப்பிடிப்பு மீதமுள்ளது என்று சமீபத்தில் தகவல் வெளியிட்டது.

இந்நிலையில் வரும் திங்கள் அன்று கோப்ரா படத்தின் முதல் பாடல் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →