தமிழ்த் திரையுலகின் மூத்த நடன இயக்குநரான பிருந்தா இயக்குநராக அறிமுகமாகிறார்.
பிருந்தா இயக்கும் ஹே சினாமிகா படத்தின் கதாநாயகனாக துல்கர் சல்மானும் கதாநாயகிகளாக காஜல் அகர்வாலும் அதிதி ராவும் நடிக்கிறார்கள். இன்று, பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. பிருந்தா இயக்கும் படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. பூஜை நிகழ்ச்சியில் பிரபல இயக்குநர் மணி ரத்னம் கலந்துகொண்டு பிருந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இயக்குநராக பிருந்தா அறிமுகமாவதற்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.