முகப்பு
செய்திகள்

அரைமணி நேரத்தில் வெளியாகிறது மாஸ்டர் படத்தின் அடுத்த பாடல்!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் 3-வது பாடல் இரவு 8.30 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:11 PM
பகிர்:


விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் 3-வது பாடல் இரவு 8.30 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், ஏற்கெனவே இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டன. முதலிரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து இசை வெளியீட்டு விழா குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவுக்கு ஒருநாள் முன்னதாக 3-வது பாடலையும் வெளியிடுகிறது படக்குழு. 'வாத்தி ரெய்டு' எனும் இந்தப் பாடல் இரவு 8.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →