செய்திகள்

கரோனா ஆன்டிபாடி பரிசோதனையில் பிரபல பாடகி மடோனாவுக்கு பாசிடிவ்!

பிரபல பாடகி மடோனாவுக்கு கரோனா ஆன்டிபாடி பரிசோதனையில் பாசிடிவ் என்கிற முடிவு வந்துள்ளது.

எழில்

பிரபல பாடகி மடோனாவுக்கு கரோனா ஆன்டிபாடி பரிசோதனையில் பாசிடிவ் என்கிற முடிவு வந்துள்ளது. இத்தகவலை அவர் இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 2 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 37,300 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகியான மடோனா படங்களிலும் நடித்துள்ளார். உலகளவில் புகழ்பெற்ற 61 வயது மடோனா, ஆன்டிபாடி பரிசோதனையில் தனக்கு பாசிடிவ் என முடிவு வந்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆன்டிபாடி பரிசோதனையில் பாசிடிவ் என்கிற முடிவு, கரோனாவுக்கான சாத்தியம் இருப்பதை உறுதி செய்திருக்கிறது என்று சொல்லலாம்

ஆன்டிபாடி பரிசோதனை என்பது குறிப்பிட்ட நபரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். அந்த நபா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அதை எதிா்த்துப் போராடுவதற்கான ஆன்டிபாடிகள் அவரது ரத்தத்தில் உருவாகியிருக்கும். அதைக் கண்டறிவதே ஆன்டிபாடி பரிசோதனையாகும்.

பரிசோதனையின் முடிவை அறிந்துகொண்ட பிறகு, தான் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து மடோனாவின் பதிவுகளில் ரசிகர்கள் அவருக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகக் கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் சாடல்

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT