முகப்பு
செய்திகள்

கிராமத்து மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கிய சல்மான் கான்

கரோனா நெருக்கடியால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள கிராமத்து மக்களுக்கு மளிகைப் பொருள்களை வழங்கியுள்ளார் நடிகர் சல்மான் கான்.

செய்திகள்

கிராமத்து மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கிய சல்மான் கான்

கரோனா நெருக்கடியால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள கிராமத்து மக்களுக்கு மளிகைப் பொருள்களை வழங்கியுள்ளார் நடிகர் சல்மான் கான்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:35 PM
பகிர்:

கரோனா நெருக்கடியால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள கிராமத்து மக்களுக்கு மளிகைப் பொருள்களை வழங்கியுள்ளார் நடிகர் சல்மான் கான்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 2 லட்சத்து 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 42,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, 21 நாள் தேசிய ஊரடங்கை கடந்த மாா்ச் மாதம் 24-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். மாா்ச் 25-ஆம் தேதி தொடங்கிய இந்த ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி நிறைவடையவிருந்தது. ஆனால், கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வராததைத் தொடா்ந்து, மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்தச் சூழலில், பல்வேறு தளா்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 1-ஆம் தேதி அறிவித்தது. இதுதொடா்பான வழிகாட்டுநெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. அதன்படி, நாடு முழுவதும் சில பொதுவான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். அதேசமயம், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என வகைப்படுத்தப்பட்டுள்ள மண்டலங்களுக்கு ஏற்றவாறு தளா்வுகள் அமல்படுத்தப்படவுள்ளன.

இந்நிலையில் கரோனா நெருக்கடியால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள கிராமத்து மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களை வழங்கியுள்ளார் நடிகர் சல்மான் கான். ஊரடங்கால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக அன்னதானம் சவால் என்கிற முன்னெடுப்பின் மூலம் இந்தக் காரியங்களை அவர் செய்து வருகிறார். சல்மான் கான் சமீபத்தில் வெளியிட்டுள்ள விடியோவில், அவருடைய பண்ணை வீட்டிலிருந்து அவரும் நண்பர்களும் இணைந்து பல வண்டிகளில் மளிகைப் பொருள்களை அனுப்பும் காட்சி இடம்பெற்றுள்ளது. இப்பணியில் உதவிய ஜாக்குலின் பெர்னாண்டஸ், லூலியா வண்டூர் ஆகிய திரையுலகப் பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →