முகப்பு
செய்திகள்

வட சென்னை 2, வாடிவாசல் பற்றி இயக்குநர் வெற்றிமாறன்

வடசென்னை 2, வாடிவாசல் படங்கள் பற்றி ஒரு பேட்டியில் வெற்றிமாறன் கூறியதாவது...

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:

வட சென்னை2, வாடிவாசல் படங்கள் பற்றி தகவல் தந்துள்ளார் வெற்றிமாறன்.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய படம் வட சென்னை. 2018-ல் வெளிவந்தது, இதற்குப் பிறகு வட சென்னை 2 படம் பற்றி ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளார்கள்.

தனுஷ் நடிப்பில் அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறன் அடுத்ததாக சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதற்குப் பிறகு சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் வடசென்னை 2, வாடிவாசல் படங்கள் பற்றி ஒரு பேட்டியில் வெற்றிமாறன் கூறியதாவது:

வட சென்னை 2 படமெடுக்க இன்னும் சிறிது காலமாகும். அதை இணையத் தொடராக எடுக்கலாமா என யோசிக்கிறேன். எனினும் வட சென்னை 2 படம் பற்றிய இறுதி முடிவை இன்னமும் எடுக்கவில்லை. ஊரடங்குக்கு முன்பு சூரி படத்தை இயக்கி வந்தேன். அடுத்ததாக சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் படத்தை இயக்குகிறேன். ஹரியுடனான அருவா படத்தை சூர்யா முடித்தபிறகு வாடிவாசல் படம் தொடங்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.