முகப்பு
செய்திகள்

மறுமணம் செய்துகொண்ட பிரபல தயாரிப்பாளர்: படங்கள்

தெலுங்குத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ மறுமணம் செய்துகொண்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:37 PM
பகிர்:

தெலுங்குத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ மறுமணம் செய்துகொண்டுள்ளார்.

தில், ஆர்யா, பொம்மரில்லு, பிருந்தாவனம் போன்ற தெலுங்குப் படங்களைத் தயாரித்தவர் தில் ராஜூ. அவருடைய படமான Sathamanam Bhavati, 2016-ல் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாகத் தேசிய விருது பெற்றது. நான்கு நந்தி விருதுகளையும் வென்றுள்ளார்.

இவருடைய மனைவி அனிதா 2017-ல் காலமானார். இந்நிலையில் தில் ராஜூ மறுமணம் செய்துகொண்டுள்ளார். தெலங்கானாவின் நிசாமாபாத்தில் தேஜஸ்வினியை நேற்று திருமணம் செய்துகொண்டார். தில் ராஜூவின் மகள் ஹன்சிதா ரெட்டி, திருமண நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக்கொண்டார் என்று கூறப்படுகிறது. இத்திருமணத்தில் தில் ராஜூவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டுள்ளார்கள். திருமணப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →