முகப்பு
படம் - https://www.instagram.com/manav.manglani/
செய்திகள்

25 ஆண்டுகளாகப் பணியாற்றிய உதவியாளர் மரணம்: இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட ஆமிர் கான்

பிரபல நடிகர் ஆமிர் கானிடம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக உதவியாளராக இருந்தவர் அமோஸ்.

செய்திகள்

25 ஆண்டுகளாகப் பணியாற்றிய உதவியாளர் மரணம்: இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட ஆமிர் கான்

பிரபல நடிகர் ஆமிர் கானிடம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக உதவியாளராக இருந்தவர் அமோஸ்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:38 PM
படம் - https://www.instagram.com/manav.manglani/
பகிர்:

பிரபல நடிகர் ஆமிர் கானிடம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக உதவியாளராக இருந்தவர் அமோஸ்.

நேற்று அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமோஸை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள் ஆமிரும் அவருடைய மனைவி கிரணும். எனினும் சிகிச்சை பலனின்றி அமோஸ் மரணமடைந்தார். அவருக்கு வயது 60.

மும்பை பால் நகர் பகுதியில் நடைபெற்ற அமோஸின் இறுதிச்சடங்கில் ஆமிர் கானும் கிரணும் கலந்துகொண்டார்கள். கரோனா அச்சுறுத்தல் காரணமாக இருவரும் முகக்கவசம் அணிந்திருந்தார்கள். அமோஸின் குடும்பத்தினருக்கு இருவரும் ஆறுதல் அளித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஆமீர் கானின் நெருங்கிய நண்பர் கரிம் ஹஜீ ஒரு பேட்டியில் கூறியதாவது: ஆமீர், கிரண் ஆகிய இருவரும் இதனால் மிகவும் மனமுடைந்துள்ளார்கள். இந்த இழப்பை ஈடு செய்ய முடியாது என்றார் அமீர் கான். எவ்வித உடல்நலக்குறைவுமின்றி இருந்தார் அமோஸ். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். ஆமிர் கானிடம் மட்டுமல்லாமல் அனைவரிடமும் இயல்பாகப் பழகுவார். எளிமையான மனிதர் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →