கிரிக்கெட் வீரருடனான திருமணம் பற்றிய வதந்திகளுக்கு நடிகை வரலட்சுமி காட்டமாகப் பதில் அளித்துள்ளார்.
2012-ல் போடா போடி படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத் குமார். இதுவரை ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்துள்ள வரலட்சுமிக்குத் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. கிரிக்கெட் வீரர் ஒருவரை வரலட்சுமி காதலிப்பதாகவும் இந்தக் காதலுக்கு சரத் குமாரும் ராதிகாவும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் வரலட்சுமி.
ட்விட்டரில் அவர் கூறியதாவது:
எனக்குத் திருமணம் என்கிற தகவலை அறியும் கடைசி நபராகவே நான் எப்போதும் உள்ளேன். அதே முட்டாள்தனமான வதந்திகள். என் திருமணத்தில் ஏன் எல்லோரும் ஆர்வமாக உள்ளார்கள்? எனக்குத் திருமணம் என்றால் அதை அனைவரும் அறியும்படி உரக்கச் சொல்வேன். அனைத்து ஊடகங்களுக்கும் நான் தெரிவிப்பதாவது: எனக்குத் திருமணம் இல்லை, நான் திரைத்துறையை விட்டு விலகவும் இல்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.