முகப்பு
செய்திகள்

நடிகர் ராணா டகுபதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது: படங்கள்

இருவருக்கும் நீண்ட நாளாகப் பழக்கம் உண்டு. ஒட்டுமொத்தக் குடும்பமும் மகிழ்ச்சியாக உள்ளோம்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:40 PM
பகிர்:

ராணா டகுபதி. 2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

தன்னுடைய காதலியைச் சமீபத்தில் உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ராணா டகுபதி. மிஹீகா பஜாஜின் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு எனக்குச் சம்மதம் சொன்னார் என ராணா குறிப்பிட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா, டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோவின் நிறுவனர்.

ராணாவின் தந்தையும் தெலுங்குத் தயாரிப்பாளருமான சுரேஷ் பாபு ஒரு பேட்டியில் கூறியதாவது: இருவருக்கும் நீண்ட நாளாகப் பழக்கம் உண்டு. ஒட்டுமொத்தக் குடும்பமும் மகிழ்ச்சியாக உள்ளோம். திருமணம் இந்த வருடம் நடைபெறும். திருமணம் பற்றிய மேலதிகத் தகவல்களை உரிய நேரத்தில் அறிவிப்போம்.  என்றார்.

இந்நிலையில் தனக்கும் மிஹீகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதைச் சமூகவலைத்தளங்களில் அறிவித்து அதன் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் ராணா டகுபதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.