செய்திகள்

அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகும் அமிதாப் பச்சன் படம்: டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு

DIN

கரோனா தொற்று  பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதுமே மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

அமிதாப் பச்சன், ஆயுஷ்மன் குரானா நடிப்பில் ஷூஜித் சிர்கார் இயக்கத்தில் உருவான குலாபோ சிதாபோ (Gulabo Sitabo) படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 12 முதல் அமேசானில் குலாபோ சிதாபோ வெளியாகவுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. யூடியூப் டிரெண்டிங்கில் முன்னணியில் உள்ளது. இதனால் அமேசான் பிரைமில் படம் வெளியாகும்போது மேலும் அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT