செய்திகள்

அய்யப்பனும் கோஷியும் மலையாளப் படத்தின் ஹிந்தி ரீமேக்: ஜான் ஆபிரஹாம் உற்சாகம்

சண்டைக் காட்சிகள், பரபரப்பு, நல்ல கதை என அனைத்துக் கலவையும் கொண்ட படம் அய்யப்பனும் கோஷியும்...

DIN

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மலையாளப் படமான அய்யப்பனும் கோஷியும் ஏராளமான ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. பிரிதிவிராஜ், பிஜூ மேனன் நடிப்பில் சச்சி இயக்கிய இப்படம் பல மொழிகளில் ரீமேக் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழிலும் இப்படம் ரீமேக் ஆகவுள்ளது.

இந்நிலையில் அய்யப்பனும் கோஷியும் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் பெற்றுள்ளார். அவருடைய படத்தயாரிப்பான ஜேஏ நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

சண்டைக் காட்சிகள், பரபரப்பு, நல்ல கதை என அனைத்துக் கலவையும் கொண்ட படம் அய்யப்பனும் கோஷியும். இதுபோன்ற கதைகளை நம் ரசிகர்களுக்குத் தரவேண்டும் என்பதில் ஜேஏ நிறுவனம் ஆர்வமாக உள்ளது. இந்த ரீமேக் மூலம் அட்டகாசமான ஹிந்திப் படத்தைத் தயாரிக்கவுள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT