மெபினா மைக்கேல் 
செய்திகள்

பிரபல சின்னத்திரை நடிகை சாலை விபத்தில் மரணம்

பிரபல கன்னட சின்னத்திரை நடிகை மெபினா மைக்கேல்(22) புதனன்று நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார்.

IANS

பெங்களூரு: பிரபல கன்னட சின்னத்திரை நடிகை மெபினா மைக்கேல்(22) புதனன்று நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார்.

கர்நாடகாவின் மடிகேரி என்னும் நகரத்தைச் சேர்ந்தவர் மெபினா மைக்கேல். ஒரு மாடலாக தனது கலையுலக வாழ்வைத் துவங்கிய அவர். கன்னட சின்னத்திரையில் புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பியாட்டே ஹுதுஹிர் ஹள்ளி லைப்’ என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக பெரும் புகழடைந்தார்.

இந்நிலையில் புதனன்று அவர் தனது நண்பர்களுடன் தனது சொந்த  ஊரான மடிகேரிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது தேவிஹள்ளி என்னும் பகுதிக்கு அருகே வந்தபோது அவர் பயணம் செய்த காரானது எதிரே வந்த ட்ராக்டருடன் மோதியது. இதில் காரில் பயணம் செய்த நால்வருமே பலத்த காயமடைந்தனர். சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மெபினா மரணமடைந்தார். இதுதொடர்பாக பெல்லூரு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேபினாவின் மறைவிற்கு கன்னட சின்னத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT