செய்திகள்

அமேசான் பிரைமில் வெளியாகும் முன்பே தமிழ் ராக்கர்ஸில் நேரடியாக வெளியான பொன்மகள் வந்தாள் படம்!

அமேசான் பிரைமில் வெளியாகும் முன்பே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்திலும் இந்தப் படம் முறைகேடாக வெளியாகியுள்ளது.

DIN

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் அமேசான் பிரைமில் இன்று வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஒரு பெரிய மாற்றத்துக்குத் தயாராகியுள்ளது தமிழ்த் திரையுலகம்.

எனினும் அமேசான் பிரைமில் வெளியாகும் முன்பே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்திலும் இந்தப் படம் முறைகேடாக வெளியாகியுள்ளது.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா, ஆர். பார்த்திபன் நடிப்பில் ஜேஜே பிரெட்ரிக் இயக்கியுள்ள படம் - பொன்மகள் வந்தாள். இசை - கோவிந்த் வசந்தா.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால் திரையரங்குகள் அனைத்தும் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக இயங்காமல் உள்ளன. இந்த நிலையில் பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. இதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் சூர்யா துணிச்சலுடன் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.

இந்தப் படம் தொடர்பாகக் கடந்த சில வாரங்களாகப் பரபரப்பான செய்திகள் வெளியானதால் நேற்றிரவு 12 மணிக்கு அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இப்படத்தைப் பலரும் பார்த்து சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுதியுள்ளார்கள். இதனால் முதல் நாளன்று சமூகவலைத்தளங்களில் பலரும் பேசும் படமாக மாறியுள்ளது.

இந்நிலையில் அமேசான் பிரைமில் வெளியாகும் முன்பே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்திலும் பொன்மகள் வந்தாள் படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமேசான் பிரைமில் நேற்று இரவு 12 மணிக்கு பொன்மகள் வெளியானது. ஆனால் தமிழ் ராக்கர்ஸில், அதில் உள்ள தகவலின்படி இரவு 11.16 மணிக்கே பொன்மகள் வந்தாள் படம் முறைகேடாக வெளியாகியுள்ளது. இதையடுத்து சூர்யாவின் 2டி நிறுவனமும் அமேசான் பிரைம் தளமும் இதுகுறித்து சட்டபூர்வ நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோல்ட்ரிஃப் மருந்து உற்பத்தி நிறுவனம், மருத்துவர் மீது வழக்குப் பதிவு

பிக் பாஸ் 9: 20 போட்டியாளர்கள் - முழு விவரம்!

கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட இருவா் கைது

தண்டரை ஊராட்சியில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கக் கோரிக்கை

3 நாள்களில் ரூ. 235 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் -1

SCROLL FOR NEXT