முகப்பு
செய்திகள்

கார்த்திக் நரேன் படம்: தனுஷ் ஜோடியாக மாளவிகா தேர்வு!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகனன் தேர்வாகியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகனன் தேர்வாகியுள்ளார்.

தனுஷின் 43-வது படத்தை இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இசை - ஜி.வி. பிரகாஷ்.  

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் பதினாறு 2016-ல் வெளியானது. பிறகு அவர் இயக்கிய நரகாசுரன் படம் இன்னும் வெளிவராமல் உள்ளது. இதுதவிர நாடக மேடை என்கிற படத்தையும் அவர் இயக்கி வருகிறார். அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஃபியா படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. 

இந்நிலையில் கார்த்திக் நரேன் - தனுஷ் படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை மாளவிகா மோகனன் தேர்வாகியுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள மாளவிகா, அடுத்ததாக தனுஷ் படத்தில் நடிக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.