முகப்பு
செய்திகள்

ஈஸ்வரன் படப்பிடிப்பு நிறைவு: தீபாவளிக்கு டீசர் வெளியாவதாக சிம்பு அறிவிப்பு

ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக சிம்பு அறிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
பகிர்:

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் - ஈஸ்வரன். சிம்பு கதாநாயகனாக நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் கடந்த வருடம் வெளியானது. இதையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

ஈஸ்வரன் படத்தின் மோஷன் போஸ்டர் விடியோ சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக சிம்பு அறிவித்துள்ளார். மேலும் தீபாவளி தினத்தன்று படத்தின் டீசர் வெளியாகும் என்றும் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.