முகப்பு
செய்திகள்

மாலத்தீவில் தேனிலவைக் கொண்டாடும் நடிகை காஜல் அகர்வால் (படங்கள்)

தொழிலதிபர் கெளதம் கிச்லுவை சமீபத்தில் திருமணம் செய்தார் காஜல் அகர்வால்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

சமீபத்தில் திருமணமான நடிகை காஜல் அகர்வால் மாலத்தீவில் தேனிலவைக் கொண்டாடி வருகிறார். அங்கு எடுத்த புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபல நடிகையாக உள்ளார் காஜல் அகர்வால். தமிழில் கடைசியாக, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடந்து, காஜல் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் - படம் பாரிஸ் பாரிஸ். நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் பாலிவுட் திரையில் வெளியாகி, கங்கனாவிற்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த குயின் படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும், கமல் ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். 

தொழிலதிபர் கெளதம் கிச்லுவை சமீபத்தில் திருமணம் செய்தார் காஜல் அகர்வால். மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.

இந்நிலையில் தேனிலவுக்காக மாலத்தீவுக்குச் சென்றுள்ளார் காஜல் அகர்வால். கணவருடன் எடுத்த புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.