சிபி சத்யராஜ் நடித்துள்ள கபடதாரி படத்தின் டீசரை வெளியிட்ட ஏ.ஆர். ரஹ்மான்
இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இதனை பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.
சிபி சத்யராஜ் நடித்துள்ள கபடதாரி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
கவலுதாரி என்கிற கன்னடப் படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. கபடதாரி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிபி சத்யராஜ், நந்திதா ஸ்வேதா போன்றோர் நடித்துள்ளார்கள். இயக்கம் - பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, இசை - சைமன் கே கிங். தயாரிப்பாளர் - தனஞ்ஜெயன்.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இதனை பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.
கரோனா ஊரடங்கால் கபடதாரி படத்துக்கு மட்டும் ரூ. 1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சமீபத்தில் கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது: பல்வேறு காரணங்களுக்காக 200 நாள்கள் காத்திருந்த பிறகு கபடதாரி படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. பல சவால்களைச் சந்தித்துள்ளோம். தாமதத்தால் ரூ. 1 கோடி இழப்பு இப்படத்துக்கு மட்டும் ஏற்பட்டுள்ளது. எனில் ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள் என்றார்.