செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சாணிக் காயிதம்: போஸ்டர் வெளியீடு
செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சாணிக் காயிதம் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சாணிக் காயிதம் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இதற்கு முன்பு வஸந்த் ரவி, ரவீணா நடிப்பில் உருவாகியுள்ள ராக்கி என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் சாணிக் காயிதம் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ட்விட்டரில் தனுஷ் வெளியிட்டார்.
Advertisement