கோடை விடுமுறையில் வெளியாகவுள்ள சிவா, யோகி பாபு நடிக்கும் சலூன்
தர்மபிரபு படத்தை இயக்கியுள்ள முத்துக்குமரன் அடுத்ததாக சலூன் என்கிற படத்தை இயக்குகிறார்.
தர்மபிரபு படத்தை இயக்கியுள்ள முத்துக்குமரன் அடுத்ததாக சலூன் என்கிற படத்தை இயக்குகிறார்.
விரைவில் வெளிவரவுள்ள சுமோ படத்துக்கு அடுத்ததாக சிவாவும் யோகிபாபுவும் இப்படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளார்கள்.
இந்தர்குமார் தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - சாம் சிஎஸ்.
நகைச்சுவைப் படமான சலூனின் படப்பிடிப்பு ஜனவரி முதல் தொடங்கவுள்ளது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்கள்.
சமீபத்தில் வெளியான நாங்க ரொம்ப பிஸி படத்தில் யோகிபாபு நடித்திருந்தார். தமிழ்ப் படம் 2 படத்துக்குப் பிறகு சுமோ படத்தில் சிவா நடித்துள்ளார்.