முகப்பு
செய்திகள்

சிம்புவின் மாநாடு குறித்து புதிய அறிவிப்பு: நாளை வெளியீடு

நடிகர் சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தின் புதிய அறிவிப்பு நாளை (வியாழக்கிழமை) காலை 09.09 மணிக்கு வெளியாகவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:54 PM
பகிர்:


நடிகர் சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தின் புதிய அறிவிப்பு நாளை (வியாழக்கிழமை) காலை 09.09 மணிக்கு வெளியாகவுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், பாரதிராஜாவின் மகன் மனோஜ், பிக் பாக் டேனியல், ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடிக்கின்றனர்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு, அண்மையில் மீண்டும் புதுச்சேரியில் தொடங்கியது. இதுபற்றிய புகைப்படத்தை சிம்பு தனது சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டார்.

இந்த நிலையில் மாநாடு படத்தின் புதிய அறிவிப்பொன்றை நாளை காலை 09.09 வெளியிடப்போவதாக மாநாடு படக் குழு தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →