செய்திகள்

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டெனெட்: டிசம்பர் 4-ல் வெளியாகிறது

ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. 

DIN

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் டெனெட் (Tenet) என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பட்டின்சன், எலிசபெத் டெபிக்கி, மைக்கேல் கைன், டிம்பிள் கபாடியா போன்றோர் நடித்துள்ள இந்தப் படம் இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

டெனெட் படம், முதலில் ஜூலை 17 அன்று வெளிவருவதாக இருந்தது. பிறகு கரோனா அச்சுறுத்தல் காரணமாக இருமுறை வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டது. திரையரங்குகள் திறக்கப்படாததால் படத்தின் வெளியீடு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாகக் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் டெனெட் படம் இந்தியாவில் டிசம்பர் 4 அன்று வெளியாகவுள்ளது. ஆங்கிலப் படமான டெனெட், இந்தியாவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழிகாட்டுங்கள்

தீபாவளி: கடைவீதியில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு! பாதுகாப்புப் பணியில் 777 போலீஸாா்

மும்பையின் நிழல் உலக தாதாக்களை ஒடுக்கிய தமிழர்

டி.ஏ.மதுரம் - நான் சந்தித்த பிரபலங்கள் - 28

சைகை மொழி புரிய வைக்கிறார்கள்?

SCROLL FOR NEXT