செய்திகள்

நான்கு இயக்குநர்களின் பங்களிப்பில் நெட்பிளிக்ஸ் உருவாக்கியுள்ள தமிழ்ப் படம்

DIN

கெளதம் மேனன், சுதா கொங்கரா, கார்த்திக் சுப்புராஜ், ராஜீவ் மேனன், சுஹாசினி மணி ரத்னம் என தமிழ் சினிமாவின் ஐந்து இயக்குநர்கள் ஒன்று சேர்ந்து புத்தம் புதுக் காலை என்கிற படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்துக்காக இயக்கியுள்ளார்கள். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அக்டோபர் 16 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும்.

இந்நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளமும் பல இயக்குநர்களின் கூட்டணியில் தமிழ்ப் படம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

பாவ கதைகள் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நான்கு கதைகள் உள்ளன. சுதா கொங்கரா, வெற்றிமாறன், விக்னேஷ் சிவன், கெளதம் மேனன் என நான்கு இயக்குநர்கள் இயக்கியுள்ளார்கள். 

பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, அஞ்சலி, சிம்ரன், பவானி ஸ்ரீ, கெளதம் மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், ஷாந்தனு பாக்யராஜ் போன்றோர் பாவ கதைகள் படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் திரையரங்குகளில் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு இல்லை. கரோனாவால் திரைப்படத் துறையில் ஏற்பட்டிருக்கும்  அசாதாரண சூழலில், சினிமாவின் மாற்றுத் தளமாக  ‘ஓடிடி’  அமைந்திருக்கிறது. வீட்டுக்குள் இருந்து தொலைக்காட்சி, இணையம் வழியாக படங்களைப் பார்த்து வருகிறார்கள் சினிமா ரசிகர்கள். இதனால் நெட்பிளிக்ஸ், அமேஸான் பிரைம் போன்ற ஓடிடி தளங்கள் அதிகம் பலனடைந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT