படம் - facebook.com/freemangang/ 
செய்திகள்

தூக்கத்தில் பிரிந்த உயிர்: பிரபல நடிகை சாந்தி வில்லியம்ஸின் மகன் காலமானார்

தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு ஆப்ரஹாமின் உயிர் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.

DIN

பிரபல நடிகை சாந்தி வில்லியம்ஸின் மகன் மரணமடைந்துள்ளார்.

திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து புகழ்பெற்றவர் சாந்தி வில்லியம்ஸ். 12 வயதில் வியட்நாம் வீடு படத்தில் அறிமுகமானார். மெட்டி ஒலி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொலைக்காட்சித் தொடர்கள் மூலமாக நன்குக் கவனம் பெற்றார். இவருடைய கணவர் வில்லியம்ஸ், மலையாளத்தில் பிரபல ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் இருந்தவர். 2005-ல் இவர் மறைந்தார். 

சாந்தி வில்லியம்ஸுக்கு ஆப்ரஹாம் சந்தோஷ், தன்யா, சிந்து, பிரசாந்த் என நான்கு குழந்தைகள் உள்ளார்கள். இந்நிலையில் அவருடைய 35 வயது மகன் ஆப்ரஹாம் சந்தோஷ், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு ஆப்ரஹாமின் உயிர் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடைபெற்ற உடற்கூராய்வுக்குப் பிறகு ஆப்ரஹாமின் உடல் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மரணம் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குற்றவாளி என தீர்ப்பு! நீதிமன்றத்தில் தனித்துவிடப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா

மத நல்லிணக்கம் பேசிய அயோத்திக்கு தேசிய விருது தராதது ஏன்?

ஆபரேஷன் அகால்: ஜம்மு - காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை!

'மோசமான நாள்' - காஸாவில் இஸ்ரேல் துப்பாக்கிச்சூட்டில் 106 பேர் பலி!

மக்களவைத் தேர்தல் மோசடி: 6.5 லட்சம் பேரில் ஒன்றரை லட்சம் போலி வாக்காளர்கள்! - ராகுல்

SCROLL FOR NEXT