முகப்பு
செய்திகள்

சன் டிவியில் நேரடியாக வெளியாகும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!

கும்கி படத்தில் ஒன்றாக நடித்த விக்ரம் பிரபு - லட்சுமி மேனன் ஆகிய இருவரும் சன் டிவி தயாரிக்கும் படத்தில்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:35 PM
பகிர்:

கும்கி படத்தில் ஒன்றாக நடித்த விக்ரம் பிரபு - லட்சுமி மேனன் ஆகிய இருவரும் சன் டிவி தயாரிக்கும் படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். 

முத்தையா இயக்கும் இப்படத்துக்குப் பேச்சி என்று பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குட்டிப் புலி, கொம்பன் ஆகிய படங்களுக்குப் பிறகு முத்தையா இயக்கும் படத்தில் லட்சுமி மேனன் மீண்டும் நடிக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது. 

இந்தப் படம் நேரடியாகத் திரையரங்குகளில் வெளியாகாது. பதிலாக, அடுத்த வருடம் பொங்கல் தினத்தில் சன் டிவியிலும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் நேரடியாக வெளியாகவுள்ளது. 

இப்படம் குறித்த அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.