செய்திகள்

நித்யா மேனனுடன் இணைந்து மலையாளப் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

நித்யா மேனனுடன் இணைந்து மலையாளப் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி.

DIN

நித்யா மேனனுடன் இணைந்து மலையாளப் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி.

கடந்த வருடம் வெளியான மார்கோனி மத்தாய் என்கிற மலையாளப் படத்தில் ஜெயராமுடன் இணைந்து நடித்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில் அவர் முதல்முறையாக மலையாளப் படமொன்றில் கதாநாயகனாக நடிக்கிறார்.

அறிமுக இயக்குநர் வி.எஸ். இந்து இயக்கவுள்ள இப்படத்தில் கேரளாவில் படமாக்கப்படவுள்ளது. ஒன்றரை வருடத்துக்கு முன்பே இப்படத்தில் நடிக்கச் சம்மதித்துள்ளார் விஜய் சேதுபதி. கரோனா அச்சுறுத்தல் இல்லாவிட்டால் இந்த வருட ஆரம்பத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகியிருக்கும். பெரும்பாலான காட்சிகளில் விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் நடித்தால் மட்டும் போதும் என்பதால் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. இப்படம் பற்றி இயக்குநர் இந்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

விஜய் சேதுபதியின் 2-வது மலையாளப் படத்தை ஆண்டோ ஜோசப் தயாரிக்கிறார். இசை - கோவிந்த் வசந்தா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT