முகப்பு
செய்திகள்

தெலங்கானா வெள்ள நிவாரணம்: சிரஞ்சீவி, மகேஷ் பாபு தலா ரூ. 1 கோடி நிதியுதவி!

வரலாறு காணாத இயற்கைச் சீற்றத்தைச் சந்தித்து வரும் தெலங்கானா மாநில மக்களுக்கு..

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

தெலங்கானா வெள்ள நிவாரணத்துக்கு நடிகர்கள் பலரும் நிதியுதவி அளித்துள்ளார்கள். 

கடந்த வாரம் ஹைதராபாத் மற்றும் தெலங்கானா மாநிலத்தின் பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் பலத்த மழை கொட்டி தீா்த்தது. ஹைதராபாதில் 1916-ஆம் ஆண்டுக்கு பிறகு 20 செ.மீ மழை பதிவாகியது. பல இடங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் பலர் பலியாயினா். மேலும், மழை காரணமாக ரூ.5,000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக மாநில அரசு தெரிவித்தது.

தெலங்கானாவில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வரும் கனமழைக்கு 70 பேர் உயிரிழந்துவிட்டதாக அந்த மாநில அமைச்சர் கே.டி.ராமராவ் திங்கள்கிழமை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: 1908-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது பதிவான மழையின் அளவு இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 37,000 பேர் அப்புறப்படுத்தப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி (ஜிஎச்எம்சி) மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் 33 பேர், பிற மாவட்டங்களில் 37 பேர் என மொத்தம் 70 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.

இந்நிலையில் வரலாறு காணாத இயற்கைச் சீற்றத்தைச் சந்தித்து வரும் தெலங்கானா மாநில மக்களுக்கு திரை உலகம் நேசக்கரம் கொடுத்து உதவி வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதியாக ரூ. 1 கோடி வழங்குவதாகப் பிரபல நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். அதேபோல நடிகர் மகேஷ் பாபுவும் ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார். பிரபல நடிகர்கள் நாகார்ஜூனா, ஜூனியர் என்டிஆர் ஆகியோர் தலா ரூ. 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →