பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் சிம்புவின் ஈஸ்வரன் படம்!
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்துக்கு ஈஸ்வரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்துக்கு ஈஸ்வரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்திலும் சுசீந்திரன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார் சிம்பு.
சிம்பு கதாநாயகனாக நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் கடந்த வருடம் வெளியானது. இதையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் மோஷன் போஸ்டர் விடியோ வெளியாகியுள்ளது. இந்தப் படம் பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.