முகப்பு
செய்திகள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு: பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், சூர்யாவின் நடிப்பில் வெளியாகவுள்ள 40-வது படம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பாண்டிராஜின் சமீபத்திய படங்கள் போல இதுவும் வலுவான குடும்பக் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் சூர்யா நடித்திருந்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. 

வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதன்பிறகு பாண்டிராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம், சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தைத் தயாரித்து வருகிறது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →