படம் - ஏபி 
செய்திகள்

நகைச்சுவைக் கலைஞரை மணந்தார் பிரபல நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன்

உலகளவில் அதிகச் சம்பளம் பெறும் நடிகைகளில் ஸ்கார்லெட் ஜோஹன்சன் முதலிடத்தில் உள்ளார்...

DIN

நகைச்சுவைக் கலைஞர் கோலின் ஜோஸ்டை பிரபல நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் திருமணம் செய்துள்ளார். 

2018 முதல் உலகளவில் அதிகச் சம்பளம் பெறும் நடிகைகளில் ஸ்கார்லெட் ஜோஹன்சன் முதலிடத்தில் உள்ளார். அவருடைய சம்பளம் ரூ. 400 கோடி. 

இந்நிலையில் 35 வயது ஸ்கார்லெட் ஜோஹன்சன், நகைச்சுவைக் கலைஞர் கோலின் ஜோஸ்டைத் திருமணம் செய்துள்ளார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டுள்ளார்கள்.

லாஸ்ட் இன் டிரான்ஸ்லேசன், கேர்ள் வித் அ பேர்ல் இயரிங், மேரேஜ் ஸ்டோரி, ஜோஜோ ரேபிட், மேட்ச் பாயிண்ட் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார் ஸ்கார்லெட் ஜோஹன்சன். 2008-ல் கனடாவைச் சேர்ந்த நடிகரான ரையன் ரெனால்ட்ஸை முதலில் திருமணம் செய்தார். 2011-ல் இருவருக்கும் விவாகரத்து ஆனது. பிரான்சைச் சேர்ந்த ரொமைனை 2014-ல் திருமணம் செய்தார். 2017-ல் இருவருக்கும் விவாகரத்து ஆனது. இந்நிலையில் 38 வயது நகைச்சுவைக் கலைஞரான கோலின் ஜோஸ்டைத் தற்போது திருமணம் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT