முகப்பு
செய்திகள்

நகைச்சுவை நடிகை வித்யுலேகா நிச்சயதார்த்தம்: புகைப்படங்கள்

நகைச்சுவை நடிகை வித்யுலேகாவுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

Updated On : 1 செப்டம்பர் 2020, 2:54 pm IST
பகிர்:

நகைச்சுவை நடிகை வித்யுலேகாவுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

நடிகர் மோகன் ராமனின் மகளான வித்யுலேகா, 2012-ல் நீதானே என் பொன் வசந்தம் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். ஜில்லா, வீரம், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, புலி, வேதாளம் எனப் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். தமிழ்ப் படங்களுக்கு இணையாக ஏராளமான தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் வித்யுலேகாவுக்குச் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 26 அன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகச் சமூகவலைத்தளங்களில் வித்யுலேகா அறிவித்துள்ளார். வித்யுலேகாவைத் திருமணம் செய்யவுள்ள சஞ்சய், டயட்டிசியனாகவும் தொழிலதிபராகவும் உள்ளார். 

Advertisement

Advertisement

வித்யுலேகாவுக்குப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.