செய்திகள்

35 வயதில் மரணமடைந்த பாடகியின் மகன்

பிரபல பாடகி அனுராதா பட்வாலின் மகன் ஆதித்யா பட்வால் 35 வயதில் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார்.

DIN

பிரபல பாடகி அனுராதா பட்வாலின் மகன் ஆதித்யா பட்வால் 35 வயதில் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார்.

70, 80களில் பாலிவுட்டில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ள அனுராதா பட்வால், பிறகு பக்திப் பாடல்களைப் பாடுவதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். சிறந்த பாடகிக்கான தேசிய விருது பெற்ற அனுராதா பட்வால், பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். 

இந்நிலையில் அனுராதா பட்வாலின் மகனும் இசைக்கலைஞருமான 35 வயது ஆதித்யா பட்வால், சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமாகியுள்ளார். 

ஆதித்யா பட்வாலின் மறைவு குறித்து பாடகர் சங்கர் மகாதேவன் கூறியதாவது: ஆதித்யாவின் மரணச் செய்தி கேட்டு உடைந்து போயிருக்கிறேன். அருமையான இசைக்கலைஞர். நகைச்சுவை உணர்வு கொண்ட அருமையான மனிதர். நாங்கள் இருவரும் இணைந்து பல பாடல்களை உருவாக்கியுள்ளோம். இந்த இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று எழுதியுள்ளார். ஒரு பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது: பல வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நுரையீரல் பிரச்னை ஏற்பட்டு, பிறகு சிறுநீரகம் செயலிழந்து போனது. கடந்த நான்கு நாள்களாக மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று காலை மரணமடைந்து விட்டார் என்றார்.

ஆதித்யாவின் மறைவுக்குத் திரையிசைக் கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜீத் பவார் மனைவிக்கு இடம்: வலுக்கும் கோரிக்கை!

ஆஸி. ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா புதிய சாதனை!

கல்வி மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! 11,815 பேருக்கு வேலைவாய்ப்பு!

அஜீத் பவார் விமான விபத்து: மத்திய அமைச்சர் பதில்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்! - உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT